முஸ்ஹப், பக்கம் 537
-
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:77 -
فِي كِتَابٍ مَكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:78 -
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:79 -
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:80 -
أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ
அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
56:81 -
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:82 -
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:83 -
وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ
அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:84 -
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَٰكِنْ لَا تُبْصِرُونَ
ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:85 -
فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ
எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:86 -
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:87 -
فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:88 -
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:89 -
وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:90 -
فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
“வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
56:91 -
وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
56:92 -
فَنُزُلٌ مِنْ حَمِيمٍ
கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:93 -
وَتَصْلِيَةُ جَحِيمٍ
நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
56:94 -
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:95 -
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:96 -
سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
வானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன்; ஞானம் மிக்கவன்.
57:1 -
لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ يُحْيِي وَيُمِيتُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
57:2 -
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.
57:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்