முஸ்ஹப், பக்கம் 597

  1. وَالتِّينِ وَالزَّيْتُونِ

    அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-

    95:1
  2. وَطُورِ سِينِينَ

    “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-

    95:2
  3. وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ

    மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

    95:3
  4. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

    திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.

    95:4
  5. ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

    பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.

    95:5
  6. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

    எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.

    95:6
  7. فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

    எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?

    95:7
  8. أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

    அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?

    95:8
  9. اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ

    (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

    96:1
  10. خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ

    “அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

    96:2
  11. اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ

    ஓதுவீராக| உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

    96:3
  12. الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ

    அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

    96:4
  13. عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ

    மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

    96:5
  14. كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ

    எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

    96:6
  15. أَنْ رَآهُ اسْتَغْنَىٰ

    அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

    96:7
  16. إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ

    நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

    96:8
  17. أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ

    தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

    96:9
  18. عَبْدًا إِذَا صَلَّىٰ

    ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

    96:10
  19. أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ

    நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

    96:11
  20. أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ

    அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

    96:12
  21. أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ

    அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா?

    96:13
  22. أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ

    நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

    96:14
  23. كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ

    அப்படியல்ல| அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

    96:15
  24. نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ

    தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

    96:16
  25. فَلْيَدْعُ نَادِيَهُ

    ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

    96:17
  26. سَنَدْعُ الزَّبَانِيَةَ

    நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

    96:18
  27. كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩

    (அவன் கூறுவது போலல்ல;) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

    96:19

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்