முஸ்ஹப், பக்கம் 583

  1. إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا

    நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.

    78:31
  2. حَدَائِقَ وَأَعْنَابًا

    தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.

    78:32
  3. وَكَوَاعِبَ أَتْرَابًا

    ஒரே வயதுள்ள கன்னிகளும்.

    78:33
  4. وَكَأْسًا دِهَاقًا

    பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).

    78:34
  5. لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا

    அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.

    78:35
  6. جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا

    (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

    78:36
  7. رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا

    (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.

    78:37
  8. يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا

    ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.

    78:38
  9. ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا

    அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.

    78:39
  10. إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا

    நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

    78:40
  11. وَالنَّازِعَاتِ غَرْقًا

    (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-

    79:1
  12. وَالنَّاشِطَاتِ نَشْطًا

    (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

    79:2
  13. وَالسَّابِحَاتِ سَبْحًا

    வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

    79:3
  14. فَالسَّابِقَاتِ سَبْقًا

    முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

    79:4
  15. فَالْمُدَبِّرَاتِ أَمْرًا

    ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-

    79:5
  16. يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ

    பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்|

    79:6
  17. تَتْبَعُهَا الرَّادِفَةُ

    அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.

    79:7
  18. قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ

    அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.

    79:8
  19. أَبْصَارُهَا خَاشِعَةٌ

    அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.

    79:9
  20. يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ

    “நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.

    79:10
  21. أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً

    “மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”

    79:11
  22. قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ

    “அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.

    79:12
  23. فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ

    ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-

    79:13
  24. فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ

    அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.

    79:14
  25. هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ

    (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?

    79:15

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்