முஸ்ஹப், பக்கம் 584

  1. إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

    “துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,

    79:16
  2. اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ

    “நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”

    79:17
  3. فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ

    இன்னும் (ஃபிர்அவ்னிடம்| “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.

    79:18
  4. وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

    “அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).

    79:19
  5. فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ

    ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.

    79:20
  6. فَكَذَّبَ وَعَصَىٰ

    ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.

    79:21
  7. ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

    பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.

    79:22
  8. فَحَشَرَ فَنَادَىٰ

    அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.

    79:23
  9. فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ

    “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.

    79:24
  10. فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ

    இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.

    79:25
  11. إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَىٰ

    நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.

    79:26
  12. أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا

    உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.

    79:27
  13. رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا

    அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.

    79:28
  14. وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا

    அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.

    79:29
  15. وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا

    இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.

    79:30
  16. أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا

    அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.

    79:31
  17. وَالْجِبَالَ أَرْسَاهَا

    அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.

    79:32
  18. مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ

    உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).

    79:33
  19. فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ

    எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,

    79:34
  20. يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ

    அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.

    79:35
  21. وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ

    அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.

    79:36
  22. فَأَمَّا مَنْ طَغَىٰ

    எனவே, எவன் வரம்பை மீறினானோ-

    79:37
  23. وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا

    இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-

    79:38
  24. فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ

    அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.

    79:39
  25. وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ

    எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,

    79:40
  26. فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ

    நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

    79:41
  27. يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا

    (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

    79:42
  28. فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا

    அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

    79:43
  29. إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا

    அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

    79:44
  30. إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا

    அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

    79:45
  31. كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا

    நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

    79:46

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்