முஸ்ஹப், பக்கம் 595
-
وَالشَّمْسِ وَضُحَاهَا
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:1 -
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:2 -
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:3 -
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:4 -
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:5 -
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:6 -
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:7 -
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:8 -
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:9 -
وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:10 -
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:11 -
إِذِ انْبَعَثَ أَشْقَاهَا
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:12 -
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி| “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
91:13 -
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:14 -
وَلَا يَخَافُ عُقْبَاهَا
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
91:15 -
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
92:1 -
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:2 -
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:3 -
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:4 -
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:5 -
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:6 -
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:7 -
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:8 -
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:9 -
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:10 -
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:11 -
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:12 -
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:13 -
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்