முஸ்ஹப், பக்கம் 594

  1. يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي

    “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.

    89:24
  2. فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ

    ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.

    89:25
  3. وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ

    மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.

    89:26
  4. يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ

    (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!

    89:27
  5. ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً

    நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.

    89:28
  6. فَادْخُلِي فِي عِبَادِي

    நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.

    89:29
  7. وَادْخُلِي جَنَّتِي

    மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).

    89:30
  8. لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ

    இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    90:1
  9. وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ

    நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,

    90:2
  10. وَوَالِدٍ وَمَا وَلَدَ

    பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

    90:3
  11. لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ

    திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.

    90:4
  12. أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

    “ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்” என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

    90:5
  13. يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا

    “ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.

    90:6
  14. أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ

    தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

    90:7
  15. أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ

    அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?

    90:8
  16. وَلِسَانًا وَشَفَتَيْنِ

    மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?

    90:9
  17. وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

    அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.

    90:10
  18. فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

    ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.

    90:11
  19. وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ

    (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.

    90:12
  20. فَكُّ رَقَبَةٍ

    (அது) ஓர் அடிமையை விடுவித்தல்-

    90:13
  21. أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ

    அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.

    90:14
  22. يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

    உறவினனான ஓர் அநாதைக்கோ,

    90:15
  23. أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

    அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

    90:16
  24. ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

    பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.

    90:17
  25. أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

    அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.

    90:18
  26. وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ

    ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.

    90:19
  27. عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ

    அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

    90:20

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்