சூரா 75 ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

  1. وَتَذَرُونَ الْآخِرَةَ

    ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.

    75:21
  2. وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ

    அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.

    75:22
  3. إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ

    தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.

    75:23
  4. وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ

    ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.

    75:24
  5. تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ

    இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.

    75:25
  6. كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ

    அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-

    75:26
  7. وَقِيلَ مَنْ ۜ رَاقٍ

    “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.

    75:27
  8. وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ

    ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.

    75:28
  9. وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ

    இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.

    75:29
  10. إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

    உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.

    75:30
  11. فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

    ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.

    75:31
  12. وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ

    ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.

    75:32
  13. ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ

    பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.

    75:33
  14. أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!

    75:34
  15. ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ

    பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.

    75:35
  16. أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى

    வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?

    75:36
  17. أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ

    (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

    75:37
  18. ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ

    பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

    75:38
  19. فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

    பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

    75:39
  20. أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ

    (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

    75:40

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்