முஸ்ஹப், பக்கம் 593
-
وَالْفَجْرِ
விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:1 -
وَلَيَالٍ عَشْرٍ
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:2 -
وَالشَّفْعِ وَالْوَتْرِ
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:3 -
وَاللَّيْلِ إِذَا يَسْرِ
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:4 -
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:5 -
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:6 -
إِرَمَ ذَاتِ الْعِمَادِ
(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:7 -
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:8 -
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:9 -
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:10 -
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:11 -
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:12 -
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:13 -
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
89:14 -
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்| “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
89:15 -
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
89:16 -
كَلَّا ۖ بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:17 -
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:18 -
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا
இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:19 -
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:20 -
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:21 -
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
89:22 -
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
89:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்